Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin

Sinoj

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (20:50 IST)
சென்னை தீவுத்திடலில், இன்று, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கி வைத்தோம். 
 
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் தீவுத்திடலே மக்கள் கடலாகிற வகையில்,  நடைபெற்று வரும் இந்த பொருட்காட்சியின் சிறப்பை எடுத்துரைத்து உரையாற்றினோம். 
 
மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பான முறையில் அரங்குகளை அமைத்திருந்த,  சிறைத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினோம். 
 
தமிழக சுற்றுலாத்துறை-ன் 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி புது அனுபவமாக அமைய வாழ்த்துகள்''என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் சிங்கிலாக படம் பார்த்த பெண்!