மோடி அனைவரையும் வரவேற்பார் என்று அண்ணாமலை பேசியிருப்பது அதிமுகவுக்கு மறைமுக அழைப்பாக கருதப்படுகிறது.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 தேர்தலில் மட்டும் இன்றி 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் அதே நேரத்தில் தற்போது அவர் திடீரென ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்தது பாஜகவுடன் மீண்டும் அதிமுக நெருங்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை இன்று பேசிய போது நாம் வீடு கட்டி உள்ளோம், அது என் டி ஏ என்ற கூட்டணி வீடு. சிலர் உணவு அருந்தி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்கள், வெளியே சென்றவுடன் நாங்கள் வீட்டினர் இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் தான். எனினும் அவர்களுக்காக நமது வீட்டின் கதவு திறந்தே உள்ளதும் மோடி அனைவரையும் வரவேற்பார் என்று கூறியுள்ளார்.
இது அதிமுகவுக்கான மறைமுக அழைப்பு என்ற கருதப்படுகிறது.
Edited by Mahendran