Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி.மு.க கூடாரம் கூண்டோடு காலி – சரிந்தது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு ...

Advertiesment
தி.மு.க கூடாரம் கூண்டோடு காலி – சரிந்தது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு ...
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:17 IST)
தி.மு.க கூடாரம் கூண்டோடு காலி – சரிந்தது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு – கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் 400 க்கும் மேற்பட்டோர் தி.மு.க கட்சியிலிருந்து அ.தி.மு.க கட்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தினந்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
 
இந்நிலையில், முதல்வரின் உத்திரவிற்கிணங்க, ஆங்காங்கே பல்வேறு சிறப்பு திட்டங்களும், ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாருவதிலும் தமிழக அளவில் பெரும் முயற்சியெடுத்து செயல்படுத்தி வரும் நிலையில், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அந்த தி.மு.க கட்சியில் இணைந்த நாள் முதல் தினந்தோறும் கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஏராளமான தி.மு.க வினர் சப்தமே இல்லாமல், அ.தி.மு.க வினர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்து வருகின்றனர். 
 
இந்நிலையில், கரூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாங்கல் பகுதியில், பாப்புலர் முதலியார் வாய்க்காலினை தனது சொந்த செலவில் ரூ. ஒரு கோடி மதிப்பில் தூர் வாரியதை கண்ட அந்த பகுதியை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோர், கரூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வழக்கறிஞர் மதுசுதன் தலைமையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர். 
 
மலர் மாலை சூட, அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதே போல கோயம்பள்ளி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தி.மு.க வினர் தங்களை அ.தி.மு.க கட்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான கண்காட்சி