Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு.. வருத்தம் தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (12:51 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்ன தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது மாற்றுத்திறனாளிகள் குறித்து கூறிய அவரது கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. 
 
இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: 
 
கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். 
 
மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments