Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த வகை கொரோனாவையும் தடுக்கத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:42 IST)
சட்டப்பேரவையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி கேள்வி எழுப்பியது. 

 
இந்தியாவில் பரவிய டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரொனா வைரஸ்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவத் தொடங்கியது. முன்னதாக மும்பையில் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதை மறுத்தது.
 
தற்போது புதிய எக்ஸ்இ வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் புதிய வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி கேள்வி எழுப்பியது. அப்போது கொரோனா வைரஸ் எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments