சென்னை உயர்நீதிமன்ற காணொலி விசாரணையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த சில காலமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் காணொலி வாயிலாக நடந்து வருகின்றன. தற்போது நேரடியாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றாலும் சில வழக்குகள் காணொலி வாயிலாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் வழக்கு ஒன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. அதில் வாதாட வந்த வக்கீல் ஒருவர் காணொலியில் நீதிபதிகள் இருக்கும்போதே பெண் ஒருவருடன் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான நீதிபதிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறை தண்டனை விதித்துள்ளதுடன், வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.