நீட் தேர்வு ரத்து செய்யும் விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், முன்னதாக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்பு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் குறித்து குழு அமைக்காமல் நேரடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் மொழி அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “முன்னதாக அதிமுக ஆட்சியில் சட்டமன்ற தீர்மானம் இயற்றபட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை குடியரசு தலைவர் நிராகரித்தபோது அதிமுக எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது” என தெரிவித்துள்ளார்.