உளுந்தூர்பேட்டையில் சிறுமிக்கு மிமிக்ரி கற்றுத்தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் அவர் வசிக்கும் தெருவில் உள்ள குழந்தைகளுக்கு குரல் மாற்றி மிமிக்ரி செய்து காட்டி வந்துள்ளார். அங்கு வசிக்கும் 13 வயது சிறுமிக்கு மிமிக்ரி செய்ய கற்று தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.