அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதியால் அவர் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவருக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்ததில், ரத்தக்குழாய்களில் 3 அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்யப்பட்டு, அதற்கான அனுமதி பெற்று கடந்த 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 21 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையின் 7 வது தளத்தில் இருந்து 4 வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அறை எண் 435ல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.