அமைச்சர் செந்தில் பாலாஜியின் இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது.
அரசு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முன்னாள் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தகவலை பகிர்ந்துள்ளார்.
சிறையில் சென்ற பதினைந்து மாதங்களில் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் நிறுத்தமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது பக்கம் செயல்பட தொடங்கியதை அடுத்து திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் இருந்து திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி வரவேற்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், காமராஜருக்கு அஞ்சலி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து என புகைப்படங்களை பகிர்ந்து வருவதால், தற்போது அந்த பக்கம் சுறுசுறுப்பாக இயக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கூட, மகாத்மா காந்தியின் பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.