தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவரது செயலாளராக உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த அதிகாரிகளுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை இப்போது பார்ப்போம்
கே. கோபால் – உயர் கல்வித் துறை செயலர்
பிரதீப் யாதவ் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளர்
ராஜேஷ் லக்கானி – வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர்
சுந்தரவல்லி – கல்லூரி கல்வி இயக்கக ஆணையர்
விஷ்ணு சந்திரன் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர்
அமுதவள்ளி – கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்
லில்லி – சமூக நலத்துறை ஆணையர்
லலிதா – ஜவுளித்துறை இயக்குநர்
பவன்குமார் G. கிரியப்பநாவர் – பொதுத்துறை துணைச் செயலாளர்
நந்தகுமார் – தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்
தர்மேந்திர பிரதாப் யாதவ் – தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவர்
ஸ்வர்ணா – RUSA திட்ட இயக்குநர்
பிரதிவிராஜ் – பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி)
ஜெயகாந்தன் – தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்
கூடுதல் பொறுப்புகள்
சத்யபிரதா சாஹூ – கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
விஜயராஜ் குமார் – மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்