தமிழக பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அட்மிசன் தொடங்கப்படும் தேதி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 9 வரையில் உள்ள தமிழக அரசு பாடத்திட்டத்திலான பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியாகிய நிலையில் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் ரிசல்ட் வந்துவிட்ட நிலையில் அட்மிசன் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி அரசுப் பள்ளிகளில் வரும் ஆகஸ்டு 17 முதல் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்குகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11ம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்டு 24ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.