Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

edapadi

Senthil Velan

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (12:52 IST)
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்
 
"தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

 
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்'.! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.!