தேர்தலுக்காக அதிமுகவுடன், அமமுக இணைவது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
தனது சமீபத்திய பேட்டியில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது, டிடிவி தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு. அவர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து தனிச்சின்னம் வாங்கியுள்ளார். அதிமுகவுடன், அமமுக இணைவது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை.
வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தால் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. இதில் மாபெரும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். கூட்டணி பற்றி முடிவு எடுக்க முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் பொதுக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் பயணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.