Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. கார்டனில் மயங்கி உயிருக்கு போராடியதை ஒப்புக்கொண்ட சசிகலா ஆதரவு அமைச்சர்!

ஜெ. கார்டனில் மயங்கி உயிருக்கு போராடியதை ஒப்புக்கொண்ட சசிகலா ஆதரவு அமைச்சர்!

Advertiesment
ஜெ. கார்டனில் மயங்கி உயிருக்கு போராடியதை ஒப்புக்கொண்ட சசிகலா ஆதரவு அமைச்சர்!
, புதன், 1 மார்ச் 2017 (13:26 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தான் அவருக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று போன்ற பாதிப்புகள் வந்ததாக சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர்.


 
 
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளிலும் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டார், அவர் தற்போது நலமுடன் உள்ளார் என்றுதான் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல், மயங்கிய நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என பலரும் கூறி வந்தனர்.
 
இதற்கு சசிகலா தரப்பினர் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மயங்கிய நிலையில் ஒன்றும் அப்பல்லோவுக்கு கொண்டு செல்லவில்லை. அவருக்கு சாதரண காய்ச்சல் தான் என சாதித்து வந்தது இது நாள் வரை.
 
ஆனால் இதுகுறித்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா ஆதரவு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை அறியாமலே ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயக்கிய நிலைக்கு சென்றதை போட்டுடைத்து விட்டார். மேலும் உடனடியாக சிகிச்சை அளித்ததின் விளைவாகவே ஜெயலலிதா உயிர் பிழைத்தார் என அவர் கூறினார். அப்படியென்றால் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை கொண்டு செல்லும் போது அவர் உயிருக்கு போராடியபடி தானே சென்றிருக்க வேண்டும்.
 
இது தொடர்பாக அமைச்சர் பேசியதாவது, போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுடன் ஆரம்பம் முதலே கூடவே இருந்து வளர்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜம்மாள், சசிகலா  இருவரும் ஜெயலலிதாவை  ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர். ஆனால் டாக்டரை மட்டும் வரச்சொல், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று ஜெயலலிதா கூறிவிட்டார். திடீரென்று ஜெயலலிதா  மயங்கிய நிலைக்குச் சென்றார்.
 
சசிகலா, ராஜம்மாள், கார் டிரைவர் அய்யப்பன் ஆகியோர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். உடனடியாக சிகிச்சை எடுத்ததன் விளைவாக ஜெயலலிதா உயிர் பிழைத்தார் என கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒளி வடிவத்தில் தோன்றிய சீரடி சாய்பாபா: கேமராவில் பதிவு (வீடியோ)!