கர்நாடகாவில் மைசூரு மாவட்டம் உண்சூரில் பிரபல சீரடி சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. கோவில் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பிரிவில் பணியாற்றும் ஊழியர், வீடியோவில் பதிவான காட்சிகளை பார்த்து கொண்டிருந்தபோது, கருவறையின் ஒரு பகுதியில் வெளிச்சமாக பாபாவின் உருவம் பதிவானது.
பணியாற்றும் ஊழியர் அதை பார்த்து ஆச்சரியமடைந்து உடனே காட்சி தெரிந்த இடத்திற்கு ஓடி சென்று பார்த்தபோது, பாபாவின் உருவம் தெரியவில்லை. மீண்டும் கேமிராவில் பார்த்தபோது, அதில் உருவம் தெரிந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து கேமிராவில் பதிவாகியுள்ள பாபாவின் உருவத்தை பார்த்துள்ளனர்.
கோவில் நிர்வாகி இதுகுறித்து கூறுகையில் தான் பிப்ரவரி 27 தேதியன்று காலை 7.30 மணியளவில் சிசிடிவி அறையில் அமர்ந்திருந்தேன். எதிர்பாராத விதமாக கேமராவை பார்த்துக்கொண்டிருந்தபோது சாய்பாபா முன்பு வெள்ளை நிறத்தில் ஒரு ஒளி தோன்றியது. அதில் சாய்பாபா போன்ற உருவம் தோன்றியது. உடனடியாக சாய்பாபா சிலை முன்பு ஓடிச் சென்று பார்த்தேன். ஆனால் அந்த உருவம் மறைந்துவிட்டது என கூறியுள்ளார்.
இந்த செய்தி உடனடியாக காட்டு தீப்போல் பரவியதால், நூற்றுக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதோ வீடியோ பதிவு உங்கள் பார்வைக்கு......