அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வரும் செமஸ்டருக்கு இந்த கட்டண உயர்வு கிடையாது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் ஒரு பேப்பருக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி டிகிரி சான்றிதழ் பெறுவதற்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும் மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது குறித்து பேட்டி அளித்த போது  அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50% கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு கிடையாது என்று கூறினார்
மேலும் அனைத்து துணை வேந்தர்களிடம் கலந்து ஆலோசித்து அடுத்த ஆண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.