Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது.. பாஜக சட்ட உதவி செய்யும்: அண்ணாமலை

Advertiesment
குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது.. பாஜக சட்ட உதவி செய்யும்: அண்ணாமலை
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (08:01 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு முழு ஆதரவு மற்றும் சட்ட உதவியை பாஜக தரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ஊருக்கு அவர் மேலும் கூறியதாவது

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.

திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விவரங்கள்..!