டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம் கிடையாது என்றும், வழக்கம்போல் திறக்கப்படும் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் டெட்ரா பேக்கில் மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து அனைவரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது அரசின் கொள்கையைக் கவனத்தில் கொண்டு பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
மேலும் கோயில், பள்ளிகளுக்குப் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக டாஸ்மாக் கடை காலையில் திறக்கப்படும் என்று தகவல் வெளிவந்ததை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது