Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச பதிவு....விஜய் ரசிகர்கள் யார் என்பதனையும் உணர்த்தும்- ராஜேஸ்வரி பிரியா

Advertiesment
vijay
, வெள்ளி, 30 ஜூன் 2023 (13:08 IST)
குறையை சுட்டி காட்டினால் ஆபாச பதிவுகளை இடும் போக்கு சமூகத்திற்கு ஆபத்தானது மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் யார் என்பதனையும் உணர்த்தும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்  நடிப்பில்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தின்  முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இப்பாடல் காட்சியிலும், போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வலுத்தது. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.

இளைஞர்களை மதுகுடிக்கவும், புகைப்பிடிக்கவும் தூண்டுவதா என்று  நடிகர் விஜய்க்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேவரி பிரியா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபற்றி அவர் சமூக ஊடகங்களில் அளித்த பேட்டியும் வைரலானது. அதில் ‘’சமூக பொறுப்பில்லாமல் போதைப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பாடலை பாடி நடித்துள்ள நடிகர் விஜய் அவர்களின் கவனத்திற்கு ‘’என்று வீடியோ பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து, லியோ படக்குழுவினர் இப்பாடல் காட்சியில், புகைப்பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும் என்று பதிவேற்றியது.

இதுபற்றி ராஜேஷ்வரி பிரியா  தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!

கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.

வெற்றி நமதே!!! இன்னும் தொடரும்……’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு  விஜய் ரசிகர்கள், அவருக்கு  விமர்சனம் மற்றும் ஆபாச   பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டி வரும்  ராஜேஸ்வரி பிரியா, இன்று மீண்டும் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’நான் பிகில் திரைபடத்தில் வரும் “சிங்க பெண்ணே” பாடலை வாழ்த்திய போது என்னை புகழ மனமில்லாத ரசிகர்கள் ,குறையை சுட்டி காட்டினால் ஆபாச பதிவுகளை இடும் போக்கு சமூகத்திற்கு ஆபத்தானது மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் யார் என்பதனையும் உணர்த்தும்.

“நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே’’என்று பதிவிட்டு, நடிகர் விஜய்க்கு டேக் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கம் பெண்ணே என்ற பாடலைப் பாராட்டி அவர்  பதிவிட்ட பதிவையும் இதில், பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி