Publish Date: Fri, 10 Nov 2023 (08:07 IST)
Updated Date: Fri, 10 Nov 2023 (08:10 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் தமிழகத்தில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது தவறான கருத்து என்று கூறிய அமைச்சர் முத்துசாமி பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது என்றும் குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பு இல்லை என்பதால் அவர்களால் அகற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
பெரியார் சிலையை பாஜகவினர் அகற்றுவார்கள் என்பதை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது என்றும் ஒருவேளை பெரியார் சிலை அகற்றப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் நீதிமன்றமும் அதை அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
ஏற்கனவே பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறியதற்கு அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது