Publish Date: Sat, 01 Oct 2022 (08:34 IST)
Updated Date: Sat, 01 Oct 2022 (08:36 IST)
அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு!
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மைய நாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.