Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ma subramaniam
, திங்கள், 21 நவம்பர் 2022 (13:52 IST)
தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை எழும்பூரில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய்  பரவி வருகிறது 
 
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மெட்ராஸ் ஐ வந்தவர்கள் தாமாகவே மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
தமிழகத்தில் தினசரி 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டாலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு மெட்ராஸ் ஐ இருக்காது என்றும்  இந்நோய் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு: வழக்கை விசாரண செய்கிறது என்ஐஏ!