Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ரியா மரணம்: மருத்துவ கல்வி இயக்குனரக அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Advertiesment
priyaa
, வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:44 IST)
பிரியாவின் மரணம் குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு கால் அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் பரிதாபமாக பலியானார் 
 
இதனையடுத்து பிரியாவுக்கு மருத்துவம் செய்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
 
அந்த அறிக்கயில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வைத்து கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
 
முதல்கட்டமாக பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை விசாரணை செய்ய சம்மன் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி