Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக ஆட்சியால் தான் 11 மருத்துவக்கல்லூரி வந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Advertiesment
திமுக ஆட்சியால் தான் 11 மருத்துவக்கல்லூரி வந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
, புதன், 12 ஜனவரி 2022 (10:11 IST)
தமிழகத்தில் இன்று திறக்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் திமுக ஆட்சியால் தான் வந்தது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொளி மூலம் திறக்க உள்ளார். இது குறித்த விளம்பரங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சி காலத்தில்தான் கட்டப்பட்டன என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் புதிய மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்குவதற்கு 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே திமுக ஆட்சியில்தான் அரசாணை வெளியிடப்பட்டது என்றும் உண்மையில் அதிமுகவால் தான் இந்த திட்ட பணிகள் தாமதம் ஆனது என்றும் விளக்கமளித்துள்ளார் 
 
அவரது இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடதக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் தினத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!