Publish Date: Wed, 12 Jan 2022 (07:30 IST)
Updated Date: Wed, 12 Jan 2022 (06:30 IST)
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அதாவது அறுபத்தி எட்டு நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விலை ஏற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று 69 வது நாளாகவும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது