தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுபாடு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் சில மாற்றங்களோடு நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
தீபாவளி திருநாளின்போது பட்டாசு வெடிப்பதால் கரியமில வாயுக்கள் காற்றில் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசுபாடும் பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான காலக்கெடுவை கடந்த ஆண்டு முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வாங்கும் அளவிற்கும் இந்த ஆண்டு முதல் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் கே.சி.கருணப்பன் “கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவு நிர்ணயம் செய்யப்படும். மேலும் சுற்றுசூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையே வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும். நேர கட்டுபாடு குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு விரைவில் அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.