Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கோடியே 28-லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

J.Durai
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (21:08 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 5 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில்நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு சுமார் ஐந்து கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்தார்.
 
மாம்பாடியில் ஊராட்சியில் எம்.ஜி.எஸ்.எம்.டி திட்டத்தின் மூலம் ரூபாய்106.07 லட்சம் மதிப்பீட்டில் குமாரசாமி கோட்டை தார் சாலை முதல் தொட்டி பாளையம் தார் சாலை வரை பலப்படுத்தும் பணி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். 
 
மேலும் எம்.ஜி.எஸ்.எம்.டி திட்ட மூலம் 16.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். 
 
அலங்கியம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இஸ்லாமிய சமுதாய மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, அலங்கியம் வார்டு எண் ஐந்து பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கும் பணியினையும், தளவாய்பட்டினம் ஊராட்சியில் எம்.ஜி.எஸ்.எம்.டி திட்ட மூலம் 33.25 லட்சம் மதிப்பீட்டில் தாராபுரம் சாலை முதல் அய்யம்பாளையம் சாலை வழி பாப்பையன் புதூர் சாலை வரை பலப்படுத்தும் பணி துவக்கி வைத்தார், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் எம்.ஜி.எஸ்.எம்.டி திட்டம் மூலம் 50.49 லட்சம் மதிப்பீட்டில் தாராபுரம் ரோடு முதல் திருப்பூர் ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணியை துவக்கி வைத்தார்.
 
பொட்டிக்கம் பாளையம் ஊராட்சியில் எம்.ஜி.எஸ்.எம்.டி திட்டத்தின் மூலம் 59.87 லட்சம் மதிப்பீட்டில் தூங்காதே சாலை முதல் பல்லாக் கோவில் சாலை வரை சாலையை பலப்படுத்தும் பணியை துவக்கி வைத்தார்.மொத்தம் 5 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வழக்கு திட்ட பணிகளை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments