Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

25 வழித்தடங்களில் 25 புதிய பேருந்துகளை அமைச்சர் பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்!

25 வழித்தடங்களில் 25 புதிய பேருந்துகளை அமைச்சர் பொன்முடி  கொடியசைத்து துவக்கி வைத்தார்!

J.Durai

, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (18:08 IST)
விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய 25 பேருந்துகள் இன்று உயர் கல்வித் தறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர்  கொடியாசித்து பேருந்து துவக்கி வைத்தனர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 13 புறநகர் பேருந்துகளையும் 12 நகர பேருந்துகளையும் துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி......
 
தமிழகத்தில் முதன்முதலாக கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டன 2021 ஆம் ஆண்டு முதல் 24 ஆம் ஆண்டு வரை 371 போக்குவதற்காக புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன இதில் 37 புறநகர் பேருந்துகளும் விழுப்புரம் மண்டலத்தில் 81 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன இதில் முதற்கட்டமாக 36 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது தற்பொழுது இன்று 25 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன இதில் 13 பேருந்துகள் புறநகர் பேருந்து 12 பேருந்துகள் நகரப் பேருந்துகள் என்று தெரிவித்தார்.
 
மக்களிடம் நன்மதிப்பு பெறுவதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அரசுக்கு அனுமதிப்பு கிடைக்கும்.
 
தனியார் பேருந்தாக இருந்தது அரசுடைமையாக்கப்பட்டு மண்டலவாதியாக பிரிக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து களமாக மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன தற்பொழுது விழுப்புரம் மண்டலத்திற்காக 371 பேருந்துகள் வழங்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெகதீப் தன்கர் - ஜெயா பச்சன் இடையே காரசார விவாதம்.! தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!!