OTT-யில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் OTT-யில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. அவற்றில் முதல் படியாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, OTT-யில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், OTT-யில் திரைப்படம் வெளியிடுவதை அரசால் நேரடியாக தடுக்க முடியாது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.