Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆரையே பார்த்த கட்சி திமுக.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் நேரு..!

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (10:28 IST)
தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு, "எம்.ஜி.ஆர்-ஐயே பார்த்த கட்சி தி.மு.க." என்று மறைமுகமாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை தாக்கிப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போது தமிழக அரசியலில், விஜய்யை விமர்சிக்காமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு பக்கம் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் விஜய்யை தங்கள் பக்கம் வளைத்துப் போட முயற்சித்து வரும் நிலையில், "தி.மு.க.தான் தனது முதல் எதிரி" என்று விஜய் கூறியதையடுத்து, தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
 
அந்த வகையில், அமைச்சர் நேரு, "செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆர்-ஐப் பார்த்த தி.மு.க.வினர் இவரையும் பார்ப்பார்கள், இதற்கு மேலும் பார்ப்பார்கள்" என்று மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார். 
 
அமைச்சர் நேரு மட்டுமின்றி, பல தி.மு.க. அமைச்சர்களும் விஜய்யை அவ்வப்போது விமர்சித்து வந்தாலும், விஜய் அவர்களுக்கு எந்தவிதமான பதிலடியும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments