சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச கூடாது: யாரை தாக்குகிறார் ஜெயகுமார்?

Webdunia
சனி, 12 மே 2018 (16:56 IST)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், திமுக சட்டம் ஒழுங்கு பற்றி பேச கூடாது என திமுக ஆட்சியில் நடந்த சில வன்முறை சம்பவங்களை சுட்டிகாட்டி பேசியுள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.
 
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது, இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டது இவை எல்லாம் திமுக ஆட்சியில் அரங்கேறியது.
 
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது. திமுக ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது என திமுகவை தாக்கி பேசியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments