கூட்டணி கட்சிகளாக இருக்கும் கட்சிகளுக்கு ஜெயகுமார் சிக்கலை உண்டாக்குவதாக தெரிகிறது.
சமீபத்தில் தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் தயாநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் சந்தித்தபோது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்ததாகவும், தாழ்த்தப்பட்டோர் போல் தங்களை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முரசொலியில் தலைமைச் செயலாளர் குறித்து காரசாரமான தலையங்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்தார்.
அப்போது தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் தயாநிதி மாறன் பேசி உள்ளதாகவும், தயாநிதி மாறனின் செயலை திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கூட்டணி கட்சிகளாக இருக்கு இரு கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தும் வகையில் ஜெயகுமார் பேசியிருப்பதாக திமுக தரப்பு பேசிக்கொள்கிறது.