Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் ஆண் மகனாக இருந்தால்..மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அமைச்சர் சவால்

Advertiesment
memes
, வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:49 IST)
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுவது என்பது முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்து தற்போது அதை ஒருசிலர் தொழிலாளாகவே மாற்றிவிட்டனர். தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகள், நடிகர்கள் குறித்த மீம்ஸ் போடுவதற்கென்றே சிலர் மீம்ஸ் போடும் ஆட்களை வேலைக்க்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இதுபோன்ற மீம்ஸ்கள் சிலசமயம் எல்லை மீறுவதால் சில விபரீதங்களும் ஏற்படுவதுண்டு. உதாரணமாக வைகோ குறித்த மீம்ஸ்களால் அவரது உறவினர் ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
webdunia
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் இடம்பெறுகிறது. தன் மீதான மீம்ஸ்கள் குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், 'மீம்ஸ் போடுபவர்கள் உண்மையான ஆண்மகனாக இருந்தால் தொலைப்பேசி எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டு பதிவிடுங்கள் என்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சவால் விடுத்துள்ளார். மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த சவாலை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆனந்த்ராஜ் ஆதரவு!