Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமர் நரேந்திரமோடியா? நரசிம்மராவா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:07 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகுவது நடந்து வரும் நிலையில் நரசிம்மராவ் தான் பிரதமர் என்ற வகையில் பேசிய ஒரு பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது;
 
மக்களவை எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, 'தம்பிதுரை சுறுசுறுப்பானவர், மின்னல் வேகத்தில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பார், புதுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு அதன்பின்னர் ஒருசில மணி நேரங்களில் நரசிம்மராவ் அருகே உட்கார்ந்திருப்பார் என்று கூறினார். 
 
நரேந்திரமோடியுடன் தம்பிதுரை உட்கார்ந்திருப்பார் என்பதற்கு பதிலாக நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தற்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
 
ஏற்கனவே 'ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது' என்றும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments