Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பிக்கும் முன்னரே உடைந்த மூன்றாவது அணி: தெலுங்கானா முதல்வரால் திருப்பம்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (15:44 IST)
பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் முயற்சி எடுத்த நிலையில் 3வது அணி ஆரம்பிக்கும் முன்னரே முடிவுக்கு வந்துள்ளது.
 
சமீபத்தில் தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய ஆவேசமான பேச்சால் ஆச்சரியம் அடைந்த மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டினர். 
 
இந்த நிலையில் நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்காவிட்டாலும், பாகவிற்கு போதுமான இடங்கள் கிடைக்காதபட்சத்தில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து அரசு அமைக்க ஆதரவு தருவதாக சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
 
ஏற்கனவே பணமதிப்பிழப்பு உள்பட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

போர் விமானம் தயாரிப்பவர்கள் முட்டாள்கள். எலான் மஸ்க் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments