இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கடந்த ஒரு சில நாட்களில் மிக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் தான் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 இருந்து 68 ஆக இன்று ஒரே நாளில் உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஆறு மாநிலங்கள் குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் 423 பேர்களும், தமிழ்நாட்டில் 411 பேர்களும், டெல்லியில் 386 பேர்களும், கேரளாவில் 295 பேர்களும், ராஜஸ்தானில் 179 பேர்களும், உத்தரபிரதேசத்தில் 174 பேர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நாடு முழுவதும் கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது