Publish Date: Wed, 19 Jul 2023 (13:42 IST)
Updated Date: Wed, 19 Jul 2023 (13:43 IST)
2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் இருப்பதால் தஙகளையும் இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்