பாலியல் புகார் வந்தா பள்ளிகள் மறைக்கக் கூடாது! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:42 IST)
பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என பாலியல் புகார்களை மறைக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் அதன்மீது நடவடிக்கை எடுத்தால் பள்ளி பெயர் கெட்டுப்போகும் என பல பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன. அவ்வாறாக மூடி மறைக்க முயற்சி செய்யாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்