12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
12ஆம் வகுப்பு பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நீட் தேர்வு முடிந்த பிறகு வெளியிடுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.