Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோவிற்கு மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்!!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:29 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயங்கும் மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 
சென்னையில் மெட்ரோ வந்தது முதல் இதனை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்படி முதல் கட்டமாக ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 210 மினி பஸ்கள் உள்ளன. அவற்றில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 144 பேருந்துகளும் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பேருந்துகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து சேவை துவங்கி வைக்கப்படவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments