சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயங்கும் மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் மெட்ரோ வந்தது முதல் இதனை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்படி முதல் கட்டமாக ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 210 மினி பஸ்கள் உள்ளன. அவற்றில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 144 பேருந்துகளும் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து சேவை துவங்கி வைக்கப்படவுள்ளது.