தமிழகத்தில் இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:02 IST)
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
தமிழகத்தில் ஆவின் பால் மட்டும் இன்றி பல தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியா பால் நிறுவனம் இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தியுள்ளது. இதை அடுத்து இதுவரை 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை ஆகி வந்த நிலையில், இன்று முதல் ஆரோக்கிய பால் 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
பால் சார்ந்த உணவு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதால் ஆரோக்கிய பால் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் பால் மூலப் பொருள்கள் விலை உயராத நிலையில் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் பால் விலையை உயர்த்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசே பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments