Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக் ஜாம் புயல் தாக்கம் – சென்னையின் தற்போதைய நிலவரம்!

Advertiesment
மிக் ஜாம் புயல் தாக்கம் – சென்னையின் தற்போதைய நிலவரம்!
, புதன், 6 டிசம்பர் 2023 (14:15 IST)
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இரவிலும் தொடர்ந்த மீட்புப்பணி.


தண்ணீர், உணவு உள்ளிட்டவை படகுகள் மூலம் விநியோகம் வெள்ளக்காடாய் மாறிய மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்.ஜே.சி.பி. மூலம் பால் விநியோகம் செய்த தன்னார்வலர்கள்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு. மொட்டை மாடியில் தங்கி உள்ளவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் விநியோகம்.சூழலை புரிந்து கொண்டு பொதுமக்கள் ஒத்துழைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னையில் பல்வேறு பகுதிகளில்  வடிந்து வரும் மழைநீர். முக்கிய சாலைகளில் படிப்படியாக போக்குவரத்து தொடக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாவட்டங்களில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!