Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் இரு பயணிகள் ஒருவருக்கொருவர் மோதல்.. சென்னை விமானத்தில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 27 ஜனவரி 2025 (10:08 IST)
கொச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணிகள் இருவர் ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கேரளாவை சேர்ந்த ஒரு பயணிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டல் எடுத்துக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள், இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் கொடுத்தனர். இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதிரடி படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தவுடன் அந்த விமானம் ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது.

அதன் பின், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ரகளை செய்த இரண்டு பயணிகளையும் சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர், அவர்களிடம் எந்த விதமான வெடிபொருட்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானத்தில் இருந்து இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

நடுவானில் இரண்டு பயணிகள் மோதிக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments