Publish Date: Sun, 10 Nov 2019 (13:37 IST)
Updated Date: Sun, 10 Nov 2019 (13:44 IST)
தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை, போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்த நடிகர் ரஜினிகாந்த்,எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் இருவருமே அதற்குள் சிக்க மாட்டோம் என தெரிவித்தார்.மேலும் தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றிடம் உள்ளது எனவும் கூறினார். அது தமிழகத்தில் முக்கிய பேசு பொருளானது.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, தமிழக முதலர், பழனிசாமி, வீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகி விட முடியாது என மறைமுகமாக அவரை சாடினார்.
இந்நிலையில் இன்று, திருபரங்குன்றத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் வெற்றிடம் பேச்சுக்கே இடமில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவது பொதுமக்களே. மேலும், தமிழகத்தில் வெற்றிடம் உண்டு என ரஜினி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என த் தெரிவித்துள்ளார்.