Publish Date: Tue, 15 Jun 2021 (13:31 IST)
Updated Date: Tue, 15 Jun 2021 (13:39 IST)
கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கொரோனா 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கொரொனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் தயாராக வைக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.