மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான சிறப்பு மலைரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலைரயில் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்தமான் ஒன்று. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயனிகள் பெருமளவில் இந்த ரயில் பயணத்தை விரும்பி பயனிக்கின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளாலும் அல்லது சீசன் இல்லாத நேரத்தில் போதுமான பயணிகள் இல்லாத சூழ்நிலையாலும் இந்த ரயில் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுமுண்டு. சமீபத்திய மழையால் நிறுத்தப்பட்டிருந்த இந்த சிறப்பு ரயில் தற்போது மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இன்று முதல் வாரந்தோறும் சிறப்பு மலைரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. 130 பயணிகள் வரை கொள்ளளவு கொண்ட இந்த மலை இரயிலானது இன்று காலை இயக்கப்பட்டது.