Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ பணிகள் எதிரொலி.. சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (08:48 IST)
சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம் ) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு. காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18c, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments