Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Advertiesment
தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
, திங்கள், 16 அக்டோபர் 2017 (12:13 IST)
சென்னையில் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது.  கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு காலை 6 மணிக்கு முதல் மெட்ரோ ரயிலும் இரவு 10 மணிக்கு கடைசி ரயிலும் உள்ளது.



 
 
இந்த நிலையில் தீபாவளி தினம் வரும் புதன்கிழமை வருவதை அடுத்து பேருந்துகளில் அதிக கூட்டம் இருப்பதால் பொதுமக்கள் மெட்ரோ ரயிலையும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வழக்கத்தைவிட மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
 
இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் ஒரு மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இன்றும் நாளையும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் வழக்கமான நேரங்களில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில்வே உணவை சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி